[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

8.5 லட்சம் டாலர்களுக்கு விலைபோன யூதரின் 'பத்து கட்டளைகள்' அடங்கிய கல்வெட்டு

stone-inscription-of-ten-commandments-sells-for-850k

அமெரிக்காவில், உலகின் மிகப் பழமையானதாகவும், இறை நம்பிக்கை கொண்டதாகவும் கருதப்படும் யூதரின் ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் 8.5 லட்சம் டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் புதன் கிழமை நடைபெற்ற ஏலத்தில் யூதரின் ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இடம்பெற்று 8.5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. யூத மதத்தின் முன்னோடியான சமாரிடன் என்பவரே ஹீப்ரு எழுத்து வடிவத்தில் இந்த கல்வெட்டை பொறித்துள்ளார் என கூறப்படுகிறது. இஸ்ரேலில் உள்ள சமாரிய ஜெப ஆலயத்தில் இருந்து இந்த கல்வெட்டை கொண்டு வந்ததாக ஏலத்தை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் இயக்குனர் டேவிட் எஸ் மைக்கேல்ஸ் கூறியுள்ளார்.

இக்கல்வெட்டை ஏலம் எடுத்தவர் அதனை அருங்காட்சியகம், நூலகம் அல்லது பொது இடத்தில் வைக்கலாம் என யூத மத மக்களினால் நம்பபடுகிறது.

இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த கல்வெட்டு யூத மத அடையாளமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close