[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் உளவு: எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வு

android-apps-can-track-your-location-traffic-patterns-without-your-knowledge-study

ஆண்ட்ராய்டு செயலிகள் (மொபைல் அப்ளிகேஷன்கள்) மூலம் ஒருவரை எளிதாக உளவு பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கூற்றினை ஒரு ஆண்ட்ராய்டு செயலி மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அவர்கள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு மொபைல் போன் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என நிரூபித்துள்ளனர்.

ஆய்வு குறித்து பேசிய நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் குவேரா நோபிர், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கும் பிளே ஸ்டோரில் 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி எந்தவொரு நபரும் ஒரு செயலியை மக்களின் பயன்பாட்டுக்காக பதிவேற்ற முடியும். அந்த செயலிகளின் நம்பகத்தன்மை குறித்து யாரும் சோதிப்பதில்லை. எனவே ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் போது அதன் நம்பகத்தன்மை குறித்து சிந்தித்து முடிவெடுப்பது சிறந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஒருவரின் அனுமதியின்றி கேமிரா மூலம் கண்காணிக்க முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close