[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்

chandrayaan-2-send-first-moon-picture-isro

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. 

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலம் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரயான் இந்த புகைப்படத்தை எடுத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ISROMoonஇஸ்ரோநிலவு
Advertisement:
Advertisement:
[X] Close