[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

இணையப் பயன்பாட்டில் இரண்டாம் இடத்தில் இந்தியா

india-ranks-second-in-internet-usage-worldwide


உலகளவில் இணையப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் என இளைஞர்கள் எந்நேரமும் உலாவரும் டிஜிட்டல் யுகம் குறித்து மேரி மீகர் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி உலகளவில் 2018-ம் ஆண்டு 380 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது மக்கள் தொகையில் பாதிபேர் இணையத்தின் மீது தீரா மோகத்தில் உள்ளனர். இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியல்ல - தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியே.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்குக் கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி‌ போட்டுக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றன. அதேபோல் அளவில்லா டேட்டாக்களையும், மிகக் குறைவான விலையில் வாரி வழங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் தான் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது எனலாம்.

உலகிலேயே குறைந்த கட்டணத்தில் 1ஜிபி டேட்டாவை வழங்கும் நாடு இந்தியாதான். ஒரு ஜிபி டேட்டா 18 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதிக இணையப் பயனாளர்கள் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் ஒரு ஜிபி டேட்டா, இந்தியத் தொகையி‌ல் 690 ரூபாய் கட்டணம் ‌வசூலிக்கப்படுகிறது. மூன்றாவது இடத்திலுள்ள அமெரிக்கா ஒரு ஜிபிக்கு 863 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உக்ரைன், ருவாண்டா ஆகிய நாடுகள் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கும் நாடுகளாக உள்ளன.

அதேபோல் உலகிலேயே ஒரு ஜிபி டேட்டாவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளில் ஜிம்பாவே முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு ஜிபி டேட்டாவுக்கு 5 ஆயிரத்து 248 ரூபாயை செலவு செய்ய வேண்டும். அதனால் குறைவான இணைய பயன்பாட்டாளர்கள் உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் உள்ளது ஜி‌ம்பா‌ப்வே. ஜிம்பாவேவிற்கு அடுத்து ஈக்குவடார் நாடு 4 ஆயிரத்து 595 ரூபாயை ஒரு ஜிபிக்காக வசூலிக்கிறது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close