[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ : விளையாட்டு போட்டிகளை நேரடியாக ரசிக்க புதிய வசதி அறிமுகம்

introducing-the-facebook-sports-stadium

உலகிலேயே மிக அதிகமாக 650 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், உலகில் நடைபெறும் முக்கிய விளையாட்டு போட்டிகளை நேரடியாக கண்டு ரசிக்கும் வகையில் ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ என்ற புதிய வசதியை நேற்று அறிமுகம் செய்துள்ளது..

இந்த ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ வசதி மூலம் உலகின் எந்த பகுதியில் நடைபெறும் விளையாட்டுகளை நேரலையாக காணலாம். அதில் லைவாக ஒவ்வொரு முறையும் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த விளையாட்டு போட்டியை லைக் செய்வதுடன், நண்பர்களுக்கு ஸேர் செய்யலாம். அந்த விளையாட்டை பற்றி லைவ்வாக விமர்சிக்கலாம். .

தற்போது விளையாட்டுகளைப் பற்றி ‘லைவ்’ ஆக விமர்சிக்கும் வசதியை டுவிட்டர் நிறுவனம் அளித்து வருகிறது. இந்நிலையில் டுவிட்டருக்கு போட்டியாக இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ளது. நேற்று அறிமுகம் செய்யப்பட்ட பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்துப் போட்டிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.

பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தொடங்கும் சூப்பர் பவுல் போட்டியும் ஒளிபரப்பவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அனைத்து வகையான போட்டிகளையும், பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் குறிப்பிட்ட விளையாட்டு போட்டியின் பெயரை டைப் செய்து தேடினால் அந்த போட்டியின் காட்சிகளை உடனடியாக காணும் வசதியையும் பேஸ்புக் நிறுவனம் அளிக்கிறது. விளையாட்டு ரசிகர்களிடையே இந்த ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ வசதி பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close