[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் !

drdo-imaging-satellite-to-be-launched-today

தமிழக மாணவர்கள் தயாரித்த சிறிய நானோ வகை செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. மொத்தம் இரண்டு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு பிஎஸ்எல்சி 4 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள மைக்ரோசாட் ஆர் என்ற என்ற செயற்கைக் கோளையும், தமிழக மாணவர்கள் உருவாக்கிய கலாம் சாட் செயற்கைக்கோளையும் தாங்கியே பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.

தமிழக மாணவர்கள் உருவாக்கிய கலாம் சாட் செயற்கைக்கோள் மொத்தமே 1.2 கிலோ எடையுடைய நானோ வகை செயற்கைக்கோள்ள ஆகும். இதன் ஆயுட்காலம் வெறும் இரண்டு மாதங்களே ஆகும். மொத்தமாக 12 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாட் ஆர் செயற்கைக்கோள் 690 கிலோ எடை கொண்டது. இந்த இரண்டு செயற்கைக்கோளும் வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. ராக்கெட்டின் இறுதிகட்ட நிலையான பிஎஸ் 4 இன்ஜின் மூலம் ‘கலாம்சாட்’ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 11.40 மணியளவில் ராக்கெட் விண்ணல் பாய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close