நோக்கியா நிறுவனத்தின் 8.1 மாடல் ஸ்மாட்ர்போன் நவம்பர் 28ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் போன்களுக்குப் பிறகு நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய மாடலான 8.1 ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 28ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.18 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்துடன், இரட்டைக் கேமரா வசதியுடனும் வெளிவருகிறது. முன்புறத்தில் 20 எம்பி (மெகா பிக்ஸல்) செல்ஃபி கேமராவும், பின்புறத்தில் 12 எம்பி மற்றும் 13 எம்பி என இரட்டைக் கேமராவும் உள்ளது. ஆக்டா-கோர் பிராசஸிரில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!
வங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ரத்து