[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட்

truecaller-announces-call-recording-feature-for-premium-users-on-android

மோசடி போன்களில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற ட்ரூகாலர் அப் (App) புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.

ஸ்மார்ட்போன் என்பது தற்போது பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. இதை தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பாடு என்று தான் கூற வேண்டும். உலகில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதைவிட வேகமாக தொழில்நுட்ப நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் தொலைபேசி அழைப்பு மூலம் மோசடி, உரிமையாளருக்கு தெரியாமலே வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும் மோசடி என பல வழக்குகள் காவல்நிலையங்களில் குவிகின்றன.

இதற்கு முக்கிய காரணம், தொலைபேசி மூலம் வரும் மோசடி அழைப்புகள்தான். சில நேரங்களில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில், “நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும். அல்லது உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டு விட்டது. எனவே உங்கள் கார்டின் தகவல்களை கூறுங்கள்” என ஒரு நபர் கூறுவார். வாடிக்கையாளர்களும் சற்றும் யோசிக்காமல் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்களைக் கூற, பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுவிடும். இதுதவிர மிரட்டல், தகாத முறையில் பேசுதல் போன்ற ஏராளமான நூதனக் குற்றங்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் தான் நடைபெறுகின்றன.

இதுபோன்ற குற்றங்களில் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்க ட்ரூகாலர் அப், புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரூகாலர் என்பது நமக்கு புதிய தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஆராய்ந்து, அந்த எண்ணின் உரிமையாளர்கள் பெயரை அறிந்துகொள்ள பயன்படும் அப் ஆகும். இது 2009 ஆண்டு, ஹலன் மற்றும் நமி என்பவர்களால் தொடங்கப்பட்டது. இதனை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் மொபைலில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ட்ரூகாலர் அப், புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்தப் புதிய அப்டேட் மூலம் நீங்கள், உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் ஆடியோவை பதிவு செய்ய முடியும். ஆடியோ ரெகார்ட் என்பது வழக்கமாக அனைத்து ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஒன்று தான். ஆனால் தங்கள் அப்டேட் தொடர்பாக கூறியுள்ள ட்ரூகாலர் நிர்வாகம், “நாங்கள் எங்கள் பிரிமியம் வாடிக்கையாளர்களுக்கு, போன் பேசும் போது ஆடியோ பதிவு செய்யும் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளோம். போன் பேசும் இந்த ஆப்ஷன் திரையில் தோன்றும். இதன்மூலம் பதிவு செய்யப்படும் ஆடியோ உங்கள் போன் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மோசடி மற்றும் அச்சுறுத்தலான கால்களை எளிதில் அடையாளம் காணமுடியும். இதன்மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் நீங்கள் மோசடியில் இருந்து மீட்கலாம்” என தெரிவித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close