[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
  • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
  • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
  • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
  • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
  • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
அறிவியல் & தொழில்நுட்பம் 08 Jul, 2017 03:34 PM

மொபைல் திருடர்கள் ஜாக்கிரதை: சவால் விடும் தொலைதொடர்புத் துறை

soon-stolen-mobile-phones-to-be-nothing-more-than-a-brick-govt-mechanism

தொலைந்த மற்றும் திருடப்பட்ட மொபைல்களை சிம் கார்டினை நீக்கினாலும், நிரந்தரமாக பயன்படுத்தவதற்கு தடை செய்யும் நுட்பத்தினை தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.

அதிகரித்து வரும் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையை போலவே திருடப்படும், தொலையும் ஃபோன்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களின், சிம் கார்டினை நீக்கினாலும் நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும் வகையிலான திட்டத்தை தொலைத்தொடர்பு துறை சோதனை ஓட்ட முறையில் செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பொது தொலைத் தொடர்பு துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு துறையும் இணைந்து மத்திய உபகரண அடையாள பதிவு (CEIR- Central Equipment Identity Register) எனும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த முறை தற்போது கடந்த 6 மாதங்களாக சோதனை ஓட்ட முறையில் மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்ஃபோன்கள் தொலைந்தாலும், திருடப்பட்டாலும் சிம் கார்டை ப்ளாக் செய்துவிட்டு, வேறு வழியின்றி வேறு மொபைலை வாங்கி பயன்படுத்துவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களின் ஐஎம்இஐ (IMEI) எண் எனப்படும் 15 இலக்க சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண் மூலம், அந்த மொபைலை சிம் கார்டினை நீக்கியிருந்தாலும், எந்த தொலை தொடர்பு வட்டாரங்களிலும் செயல்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் திருடப்பட்ட மொபைல் வேறு ஒருவர் பயன்படுத்துவது போலியான IMEI எண்கள் உருவாக்குவது போன்றவற்றை தடுக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறுதாக ஐஎம்இஐ நம்பரை பயன்படுத்தினால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தையும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் கொண்டு வர இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close