[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஒரே நேரத்தில் 120 நாடுகளில் களமிறங்கும் நோக்கியா!

nokia-5-nokia-3-nokia-6-and-nokia-3310-launch-in-120-countries

உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா, ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து மீண்டும் மொபைல் உலகில் புரட்சி செய்யவந்துள்ளது நோக்கியா. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா மொபைல்போன்கள், உலகிலுள்ள 120 நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் விலை மாறுபடும் என தெரிகிறது. இந்திய ரூபாயில் புதிய நோக்கியா3 மாடல் ரூ. 9,800 க்கும், நோக்கியா5 ரூ. 13,500 க்கும், நோக்கியா6 ரூ. 16,000 க்கும், நோக்கியா 3310 ரூ. 3,500க்கும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 3 இன் சிறப்பம்சங்கள்

5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 2ஜிபி ரேம், 16ஜிபி வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. மிக தெளிவான படம் மற்றும் வீடியோவை பதிவு செய்ய முன் மற்றும் பின்புற கேமரா 8 மெகாபிக்சல் தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த ஸ்மார்ட்போன் 2650மி. ஆம்பியர் பேட்டரி திறன் பெற்றுள்ளது.

நோக்கியா 5 இன் சிறப்பம்சங்கள்

நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி முன்புற கேமரா, கைரேகை ஸ்கேனர், 3000 மி. ஆம்பியர் பேட்டரி திறன் போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.

நோக்கியா 6 சிறப்பம்சங்கள்

5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி முன்புற கேமரா, கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close