[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் வெளிவரும் வாட்ச்...!

the-watch-will-come-with-android-technology

புத்தாண்டு வருவதை தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் அதன் பிரேத்யேக புதிய படைப்புகளை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கைகடிகாரத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்ககூடிய ஸ்மார்ட்வாட்ச்சை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வாட்ச் தொடு திரை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மதத்தில் இந்த வகை வாட்ச் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 2.0 தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன தயாரிப்பாளர் செப் ஜாங் தெரிவித்துள்ளார். இந்த கைகடிகாரத்தில் நேரம் பார்ப்பதுடன் கூகுள் தேடுப்பொறி தளத்தை இதில் பயன்படுத்த முடியும். மேலும் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய இயலும். மிக சிறிய தோடு திரை அமைந்துள்ள ஸ்மார்ட்வாட்ச்சில் குறிப்புகளை கூட சேமித்து வைக்க இயலும். கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு வாட்ச்- க்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close