[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பாகிஸ்தான்: லாகூரில் நடந்த குண்டு வெடிப்பில் 8பேர் உயிரிழப்பு - 30பேர் படுகாயம்
 • BREAKING-NEWS டெல்லி லோக் நாயக் பவனில் அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து
 • BREAKING-NEWS இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
 • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
 • BREAKING-NEWS ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே
 • BREAKING-NEWS மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
 • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
 • BREAKING-NEWS கோவை ஈஷா யோகா மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி மாசு: தமிழக அரசு
 • BREAKING-NEWS புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர்
 • BREAKING-NEWS மதுரையில் 2 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை
அறிவியல் & தொழில்நுட்பம் 16 Nov, 2016 04:58 PM

சந்தையில் புதிது... 20 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமிராவுடன் வெளிவந்துள்ள 'விவோ 5'

vivo-v5-with-20-megapixel-selfie-camera-launched-in-india

செல்பி பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக 20 மெகாபிக்ஸல் முன்பக்க கேமிராவுடன் விவோ 5 என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவோ போனுக்கான முன்பதிவு நாடுமுழுவதும் 22 நகரங்களில் இன்று தொடங்கியது. முன்பதிவு செய்தவர்களுக்கு நவம்பர் 26ம் தேதி முதல் விவோ 5 ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் விலை ரூ. 17.980.

விவோ 5 மாடல் போனின் சிறப்பம்சங்கள்
* விவோ 5 தங்கம் மற்றும் சாம்பல் நிற வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் எல்இடி ஃபிளாஷ் கொண்ட முன்புற கேமரா 20 மெகாபிக்சல், பின்புற கேமரா 13 மெகாபிக்சல் வசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இரண்டு சிம் கார்டுகள் வசதியுடன், ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டின் 6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்கும் வகையில் விவோ 5 வடிவமைக்கப்பட்டுள்ளது.
*புல் எச்.டி தரத்துடன் 5.5. இன்ச் திரையுடன் வெளிவந்துள்ள விவோ 5 ஸ்மார்ட்போனில், மெமரி கார்டு உதவியுடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியும், 4ஜிபி ரேம் வசதியும் உள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
* அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தவகை போனின் பேட்டரில் 3,000 மி.ஆம்பியர் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முக்கியம்சங்களான, தெளிவான ஆடியோ, வைபை, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டிஜிட்டல் திசைகாட்டி, ப்ளூடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், மற்றும் மைக்ரோ யூஎஸ்பி ஆகிய வசதிகளுடனும் விவோ 5 வெளிவந்துள்ளது.

Advertisement:
Advertisement:
[X] Close