[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

5.46 லட்சத்துடன் இந்தியாவில் அறிமுகமானது மஹிந்திரா இ2ஓ பிளஸ்

mahindra-e2o-plus-electric-car-launched-in-india-prices-start-at-5-46-lakh

மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம், மஹிந்திரா இ2ஓ பிளஸ் என்ற புதிய ரக எலக்ட்ரிக் கார் மாடலை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை 5.46 லட்சம் என அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் புதிய ரக மஹிந்திரா இ2ஓ பிளஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ 5.46 லட்சம் முதல் ₹ 8.46 லட்சம் வரை மூன்று வித விலைகளில் கிடைக்கிறது இந்த எலக்ட்ரிக் கார். இந்த புது மாடல் நவீன தொழில் நுட்பத்துடன் இளம்வயதினரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கு முன் அறிமுகமான மஹிந்திரா இ2ஓ வை விட மஹிந்திரா இ2ஓ பிளஸ் அட்வான்சில் வந்துள்ளது. இது நான்கு டோர் வடிவமானது. மிகவும் விசாலமான தோற்றத்துடன் கூடுதல் இடவசதியுடன் காட்சி அளிக்கின்றது.

இதன் பழைய மாடலை விட கார் நீளம் 310 மிமீ - 3590 மிமீ அதிகரித்துள்ளது. செங்குத்தான எல்இடி டெயில் விளக்குகள் , நம்பர் பிளேட் இடவசதி சற்று மேலே நகர்த்தப்பட்டுள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன் மானிட்டர் இதில் பயன்படுத்த எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உங்கள் கார் பாட்டரி திறன் 10 சதவிகிதம் குறைந்த நிலையிலும் 7-10 கிலோ மீட்டர் வரை இக்காரில் பயணிக்க முடியுமாம். மேலும் இதனை இயக்க காரில் ஒரு டச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கிலோ மீட்டர் செல்ல ஆக்டிவேட் செய்யலாம்.

உங்களது மொபைலில் இ2ஓ பிளஸ் என்னும் ஆப்பினை டவுன்லோட் செய்துக்கொள்ளலாம். இதன் மூலம் காரை திறக்கவும் மூடவும் முடியும். இதனை முழுதாக சார்ஜ் செய்ய 9 மணி நேரம் தேவைபடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close