[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

ஈசியா கடன் வாங்க மொபைல் அப்ளிகேஷன்: பெங்களூரு நிறுவனம் அறிமுகம்

moneytap-bringing-credit-to-consumers-on-an-app

வங்கிக் கடனை எளிதாகப் பெற பெங்களூருவைச் சேர்ந்த மணி டேப் எனும் ஸாடார்ட் அப் நிறுவனம் புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன் தொகையைப் பெற முடியும். இதன்மூலம் வங்கிக் கடனுக்கு சில நிமிடங்களில் விண்ணப்பிக்க முடியும் என்று மணி டேப் தெரிவித்துள்ளது. கடனுக்கான வட்டி 1.25 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் பெறும் எந்த ஒரு வாடிக்கையாளரும் இதன் மூலம் சில நிமிடங்களில் கடன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எப்படி கடன் பெறுவது?..

மணி டேப் (MoneyTap) எனும் மொபைல் அப்ளிகேஷனை மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கான ஒப்புதலைப் பெற முடியும். அதன்பின்னர் வங்கிகள் கேட்கும் அடையாள அட்டை, இருப்பிடச் சான்று உள்ளிட்ட அடிப்படை தகவல்களை டிஜிட்டல் வடிவில் இந்த மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்து வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்களது கடன் தொகை, ஏற்கனவே உள்ள கடன் மற்றும் மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆராய்ந்து கடன் தொகை முடிவு செய்யப்படும். அதன்பின்னர் எந்த வங்கிக் கணக்குக்கு அந்த தொகையை மாற்ற வேண்டுமோ, அந்த கணக்குக்கு பயனாளர்கள் மாற்றிக் கொள்ள முடியும். இந்த கடன் தொகையை மாதாந்திர அடிப்படையில் வங்கிக்கு இந்த மொபைல் ஆப் மூலம் நீங்கள் திரும்பச் செலுத்தலாம். கடன் தொகை திரும்பச் செலுத்துவதை வைத்து அடுத்த கட்ட கடன்களை நீங்கள் பெற முடியும்.

முதற்கட்டமாக இந்த திட்டம் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மணி டேப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close