[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

கடன் சுமையை குறைக்க எந்த திட்டமும் இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

no-plans-to-reduce-the-debt-burden-mk-stalin-accusation

கடன் சுமையை குறைக்கவும் நிதி ஆதாரத்தை பெருக்கவும் எந்தவித திட்‌டமும் நிதிநிலை அறிக்கையில்‌ இல்லை என சட்டப்பேரவை‌ எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கிய அம்சங்கள் எதுவும் இல்லாத வெற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும், வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக அரசு, அப்போதைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு விஷயங்களை அறிவித்ததாகவும், ஆனால், அதற்கு முரண்பாடாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் பட்டியலிட்டார். வரி இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது சாமர்த்தியம் அல்ல என்று கூறிய ஸ்டாலின், பிரச்னைகளை சமாளித்து நிதி ஆதாரத்தை பெருக்குவதே அரசின் சாமர்த்தியம் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close