[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

ட்விட்டர் ட்ரெண்டில் #ரஜினி_பயத்தில்திமுக - நடந்தது என்ன?

hashtag-on-twitter-what-happened

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சீரமைத்து தந்துள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஜினி மக்கள் மன்றத்தினரின் இந்த செயலை பாராட்டும் வகையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்காக கொளத்தூரின் பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன. அதேபோல், ரஜினி மக்கள் மன்றத்தினரை பாராட்டி கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. 

           

இதனிடையே, ரஜினி மக்கள் மன்றத்தினரின் செயலை பாராட்டி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு அந்த இடத்தில் இருந்து நீக்கப்பட்டது. திமுகவினர்தான் இதனை செய்ததாக கூறி ரஜினி ரசிகர்கள் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

கொளத்தூர் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திமுகவினர் நீக்கியதாக கூறி, #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டாக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close