[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

“மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது”- கமல்ஹாசன்

i-am-not-opposed-any-language-says-kamal-hassan

கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை லயோலா கல்லூரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என்றார். அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது என்ற அவர், கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது என்றும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களின் கேள்விகளுக்கும் கமல் பதிலளித்தார்.

கேள்வி: தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் என்ன ?

கமல்: இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். வேலை ஒரு பக்கம் இருந்தாலும், கல்வி முறையை அரசு சரியாக செய்ய வேண்டும்.

கேள்வி: சினிமா, அரசியல் என வாரிசு அரசியலை எப்படி பார்க்கிறீர்கள். இது பலருக்கு வாய்ப்பு இல்லாத சூழல்?

கமல்: வாரிசு அரசியல் சரியாக இருக்காது தான். அதற்காக தான் ஜனநாயகம் வந்தது. ஆனால் தமிழக அரசியலில் குடும்ப அரசியலை பிரிக்க முடியாது. அதனால் தான் என் குடும்பத்தை பெரிதாக்கினேன். அதை செய்யலாம். பாதையை பெரிதாக்க வேண்டும். மாணவர்களுக்காக பாதை வெட்ட தயாராகிவிட்டேன். அதில் மாணவர்கள் நடக்க தயாராக வேண்டும்

தமிழ் மொழியின் எதிர் காலம் எப்படி இருக்கும்..?

கமல்: தமிழ் நடக்கும் சாலையை சுத்தமாக வைக்க வேண்டும். அடிமைத்தனம் போக நல்ல விஷயமும் நடந்திருக்கிறது. சங்கிலியை உருக்கி ஆயுதமாக மாற்றியுள்ளோம். அது தான் ஆங்கிலம். *நம் உணர்வு வரை தமிழ் வாழும். அது வளர்ந்து கொண்டே இருக்கும். அதை அசைக்க முடியாது,

எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. மொழி என்பது குழந்தைகளின் 'டயபர் ' போன்றது. மொழி ஒரு தொடர்பியல் கருவி தான். எனவே அதை வைத்து அரசியல் செய்ய கூடாது. உணவகத்தில் நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்யக்கூடாது.” என்றார்.

நல்லதோ, தீமையோ உயரமான இடத்தில் இருந்து சொன்னால் நன்றாக கேட்கும். எனவே தப்பான ஆட்களை வைக்க கூடாது. எல்லா திட்டமும் கமிஷன் தான் படித்த கல்வியாளர்களிடம் திட்டம் இருக்கிறது. தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள். ஏன் இஸ்ரேல் சென்று கற்றுக் கொள்ள வேண்டும் ? எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close