[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

கே.பி.கே.செல்வராஜ் பெயர் தவறாக இடம்பெற்றுள்ளது: காங். விளக்கம்

kpk-selvaraj-name-mistakenly-included-congress

கே.பி.கே.ஜெயக்குமாருக்கு பதில் அவரது சகோதரர் செல்வராஜின் பெயர் தவறுதாக இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொகுதி மேற்பார்வையாளராக அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கே.பி.கே.செல்வராஜ், நெல்லை மாவட்ட புறநகர் சிறுபான்மை பிரிவு அதிமுக துணை செயலாளராக உள்ளார். அதிமுகவில் இருக்கும் செல்வராஜ் பெயர் காங்கிரஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தது கேள்வியை உண்டாக்கியது.

இதுகுறித்து, புதிய தலைமுறைக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் பெயர் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும், திருத்தப்பட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். கே.பி.கே.செல்வராஜ், கே.பி.கே.ஜெயக்குமார் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

0 of 1

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close