[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

“அழகான காஷ்மீரி பெண்களை இனி திருமணம் செய்யலாம்” - பாஜக எம்எல்ஏ பேச்சு

marry-fair-kashmiri-women-now-bjp-mla-after-article-370-repeal

தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியுள்ளது. அத்துடன் ஜம்மு காஷ்மீரை தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் ‌பகுதியை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு நீக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்த பல சிறப்பு சலுகைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் முஸாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சைனி என்பவர் கட்சி தொண்டர்களிடம் பேசினார். அப்போது, “370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். பாஜகவில் உள்ள இளைஞர்கள் காஷ்மீருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம்,  நிலம் வாங்கலாம்” என்று அவர் கூறினார்.

பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது. அந்தப் பேச்சுக்கு விமர்சனங்களும் எழுந்தது. பின்னர், இதுகுறித்து பேசிய விக்ரம் சைனி, சர்ச்சைக்குரிய வகையில் தான் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close