[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்துடன் கை கோர்த்த பிரசாந்த் கிஷோர் - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

mamata-and-nitish-s-poll-strategist-prashant-kishor-to-now-help-kamal-haasan

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் தேர்தல் நிபுணர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் கைகோர்க்கவுள்ளது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தேர்தல் வித்தகர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ‌தேர்தல் ஆலோசகராக இருந்தவர் ஆவார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் அமைத்து கொடுப்பவர் பிரசாந்த் கிஷோர். இவர் பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டவர்களுக்கு வியூகங்கள் அமைத்து கொடுத்து அவர்களை வெற்றி பெறச்செய்தவர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில், சட்டமன்ற தேர்தல், கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் பிரசாந்த் கிஷோர் கைகோர்க்கவுள்ளது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பெண்களின் வாக்குகள் கமலின் கட்சிக்கு சரியாக கிடைக்கவில்லை என்று கிஷோரின் ஐபேக் நிறுவனத்தினர் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு நான்கு சதவீதம் வாக்குகள் கிடைத்தன. கிராமப்புறங்களை விட நகரங்களில் இந்த கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும் மூன்றாவது இடம் பிடித்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close