[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

‘சாதிக்கு ரத்த வெறி இருக்கு; ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை’ - சீமான் பேச்சு

seeman-speech-at-munthiri-kaadu-movie-audio-release

சாதிக்கு ரத்த வெறி இருக்கு, ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

முந்திரிக்காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சீமான், “நான் கோபமாக பேசவேண்டும் என்று பேசவில்லை. நான் ஒரு அப்பாவி; பல ஆண்டுகள் இருந்த வலி அது ஆவேசமாக மொழியாக வருகிறது.

நல்ல விஷயம் நடக்கும்போது திராவிடன், பெரியாரியன் என்று பேசுவது. ஆனால், தலைகுனியும் பிரச்னை வரும்போது மட்டும் தமிழன் தலை குனிய வேண்டும் என்று சொல்லுவது... நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்துவான். இழிவு என்று எது சொல்லப்படுகிறதோ அதை எழுச்சியாக மாற்ற வேண்டும். உலகத்தில் இருப்பவன் தாய் மொழியில் பெயர் வைத்தான். ஆனால் தமிழன் தாய்மொழியையே பெயராக வைத்தான்.

முன்னேறிய வகுப்பிற்கு எதற்கு இடஒதுக்கீடு..? அதுதான் முன்னேறிவிட்டாரே எதற்கு இடஒதுக்கீடு என்று கேட்டால் பதில் இல்லை. சாதிக்கு ஏது முன்னேற்றம். சாதிக்கு ரத்த வெறி இருக்கு, ரத்ததிற்கு சாதி வெறி இல்லை.

            

கி.மு.300 ஆண்டு தான் தமிழ் தொன்மையானது என்று பாட புத்தகத்தில் உள்ளது. கீழடியை தோண்டுங்கள் தெரியும். எதையெல்லாம் தோண்ட சொல்கிறோமோ அதையெல்லாம் தோண்டமாட்டார்கள். எதையெல்லாம் மூட சொல்கிறோமோ ஹைட்ராகார்பன், மீத்தேன் அதை எல்லாம் தோண்டுவார்கள்.

ஒரே நாளில் பணம் செல்லாது என்று சொன்னதுபோல் ஒரே நாளில் சாதிகள் அற்ற குடிகள் என்று அறிவிக்கவேண்டும். சாதி பெருமை இருப்பதனால் தான் தமிழன் பிரிந்து இருக்கிறான். ஒரு தேசத்தின் அரசு சொல்கிறது இவன் உயர் சாதி தாழ்ந்த சாதி என்று... இது எவ்வளவு பெரிய கொடுமை. எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம். சிலர் சாமியை காப்பாற்ற போராடுகிறார்கள்... நாங்கள் பூமியை காப்பாற்ற போராடுகிறோம்” என்று கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close