[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

dmk-protest-for-water-issue-in-chennai

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பருவ மழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், தலைநகரமான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாக பூஜை நடத்துமாறு, அதிமுகவின் 53 மாவட்டச் செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி அதிமுகவும் யாகங்கள் நடத்தி வருகின்றனர். 

இதனிடையே குடிநீர் பிரச்னைக்காக, மக்களை திரட்டி போராட்டம் நடத்துமாறு, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, பல இடங்களில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்குமாறு பொதுமக்களையும், திமுகவினரையும் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close