[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

பாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

on-behalf-of-aiadmk-party-i-would-like-to-extend-my-hearty-congratulations-on-your-elevation-as-first-national-working-president-of-the-bjp-ops-to-j-p-nadda

பாஜகவின் தேசிய செயல்தலைவராக நியமிக்கப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அக்கட்சியில் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

         

இந்நிலையில், பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில், “பாஜக முதல் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு அதிமுக கட்சியின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களது நேர்த்தியான தலைமையின் கீழ் பாஜக இனிவரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close