[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“வெறுப்பு வேண்டாம்.. அன்புடன் பணியாற்றுங்கள் மோடி” - ராகுல் காந்தி

bjp-rss-and-pm-modi-have-hatred-for-my-family-says-rahul-gandhi

பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி வெறுப்பை விட்டுவிட்டு அன்புடன் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 7ம் கட்ட தேர்தலுக்காக ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது, என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். 

ராகுல் காந்தி பேசுகையில், “ஊழல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து பிரதமர் மோடி விவாதம் செய்ய தயாரா?. இந்த நாடு அன்பால் நிறைந்தது. ஆனால், மோடி தன்னுடைய மனதை வெறுப்பால் நிறைத்துள்ளார். பொது இடங்களில் அவரை சந்திக்கும் போது அன்புடன் அணுகுகிறேன். அவர் கண்டுக்கொள்ளாத போதும், நான் அவருடன் மரியாதையாக பேசுவேன். அப்போது அவர் பேசமாட்டார்.

               

நாட்டினை எப்படி நடத்தக் கூடாது என்பதை பிரதமர் மோடி காட்டியுள்ளார். நாட்டில் உள்ள யாரையும் கவனிக்காமல் நீங்கள் ஆட்சி செய்தால், நாடு சரியாக இயங்காது. 5 வருடங்களுக்கு முன்பு மோடியை தோற்கடிக்கவே முடியாது என சிலர் கூறினர். ஆனால், நாங்கள் பின் வாங்கவில்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் போராடினோம். மக்களிடத்திலும் போராடினோம். தற்போது அவர் அச்சத்தில் உள்ளார். நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்று தற்போது யாராலும் சொல்ல முடியாது. 

நாட்டில் முற்போக்கு சக்திகளுக்கும், பாஜக-ஆர்எஸ்எஸ்க்கும் இடையே சித்தாந்த போர் நடைபெற்று வருகிறது. அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சித்தாந்தத்தை எதிர்த்து போராடி வருகிறோம். ஆர்பிஐ கருத்தினை நிராகரித்து பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். 

                   

பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை வெறுக்கின்றனர். நம்முடைய வேலை அதனை நிராகரிப்பது. என்னுடைய தந்தை மற்றும் பாட்டி குறித்து வெறுப்புடன் பேசுகிறார். ஆனால், அவரை கட்டிப்பிடித்து என்னுடைய அன்பை வெளிப்படுத்தினேன். நீங்கள் ஒரு பிரதமர், வெறுப்பை நீக்கிவிட்டு அன்புடன் பணியாற்றுங்கள்” என்றார் ராகுல். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close