[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

தமிழகம் ஸ்டாலினை முதல்வராக்கி காட்டும் : கனிமொழி சவால்

mk-stalin-will-be-become-as-chief-minister-by-tamilnadu-people-kanimozhi

தமிழகம் விரைவில் ஸ்டாலினை முதல்வராக்கி காட்டும் என்று திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணியில் திமுக தேர்தல் காரியாலயத்தை கனிமொழி திறந்து வைத்தார். பின்னர், சவேரியார் புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது நாடு தழுவிய அளவில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆணையத்தின் செயல்பாடுகள் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் வேட்பாளர்களுக்கு சொல்லிய பின்னர் அந்த பணியை செய்தியிருக்கலாம். திடிரென எடுக்கப்பட கூடிய நிலையில், அது அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அதனை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துதான் செயல்படுகிறது என்ற பயம் எங்களுக்கு உள்ளது. ஆளும் கட்சிக்கு தோல்வி பயமுள்ளதால் தான் தேர்தல் ஆணையம் மூலம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

                    

 தெலுங்கானா முதல்வர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கலாம். ஆனால் ஸ்டாலின் தனது முடிவில் தெளிவுடன் உள்ளார். முதல்வராக அல்ல அமைச்சராக கூட கனவு முடியாதவர் தான் தமிழக முதல்வராக நாம் கண்டுள்ளோம். ஸ்டாலினை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை. விரைவில் தமிழகம் ஸ்டாலினை முதல்வராக்கிகாட்டும்.
” என்று கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close