[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை

“நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது” - சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி

neet-will-not-be-scrapped-we-will-convince-our-alliance-aiadmk-in-this-regard-piyusgoyal-union-minister-said-in-chennai

நீட் தேர்வு செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளனர். இரண்டு கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தெரிவித்து இருந்தன. பாஜகவிடம் வலியுறுத்தி செய்யப்படும் என அதிமுகவும், காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தி செய்யப்பட்டும் என திமுகவும் தெரிவித்து இருந்தன.

நீட் தேர்வு விரும்பாத மாநிலங்களில் அது ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால், பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. திமுகவின் அழுத்தத்தினால் காங்கிரஸ் கட்சி நீட் தேர்வு குறித்து அறிவிப்பை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல், அதிமுகவினால் பாஜகவிடம் அழுத்தம் கொடுத்து செய்ய முடியவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. எங்களுடைய கூட்டணி கட்சியான அதிமுகவை சமாதானம் செய்வோம். தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக்கொண்டோம். பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும்’ என்று கூறினார்.

இதனிடையே, சேலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்துப்  பரிமாற்றங்களை கேட்கிறோம்” என்று பேசியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close