[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

ஏ-சாட் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டது ஏன்? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

india-ka-dna-no-estimate-on-number-of-terrorists-killed-in-balakot-says-nirmala-sitharaman

ஏ-சாட் ஏவுகணை சோதனை தொடர்பான அறிவிப்பை விஞ்ஞானிகள் வெளியிடாமல், பிரதமர் மோடி வெளியிட்டது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 27ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஏ-சாட் ஏவுகணை சோதனை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். விண்வெளியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளதாகவும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து எலைட் சூப்பர் கிளப் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பிடித்திருப்பதாகவும் பிரதமர் பெருமிதமாக தெரிவித்தார். 

                   

விண்வெளி ஆராய்ச்சியில் நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு சாதனையை டிஆர்டிஓ அல்லது விஞ்ஞானிகள் அறிவிப்பதுதான் வழக்கம். அப்படியிருக்கையில் விஞ்ஞானிகள் அல்லாமல் பிரதமர் மோடி, அதுவும் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதேபோல், தேர்தல் ஆணையத்திடமும் அவர்கள் முறையிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து ஜி நியூஸ்க்கு அளித்த பேட்டியில் பேசிய நிர்மலா சீதாராமன், “ஏ-சாட் ஏவுகணை சோதனை அறிவிப்பை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கலாம். ஆனால், இது மிகப்பெரிய சாதனை. பிரதமர் அல்லாமல் வேறு யார் இந்தச் செய்தியை தெரிவித்திருந்தாலும், இந்த அளவிற்கு மதிப்பு இருந்திருக்காது. இது பாதுகாப்பு தொடர்பான சோதனைதான். போருக்கான சூழலை ஊக்குவிக்க அல்ல. அதனால்தான், முக்கியமான இந்த அறிவிப்பை பிரதமர் வெளியிட வேண்டியுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

                  

மேலும், பால்கோட் தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்பது வருத்தம் அளிக்கிறது என்று அவர் கூறினார். “பால்கோட் தாக்குதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பயங்கரவாத தாக்குதல் நடந்து, 40 வீரர்கள் உயிரிழந்தனர். உடனடியாக பாதுகாப்புக்கான கேபினேட் கூட்டம் நடத்தப்பட்டது. மற்ற அமைப்புகளும் ஒருங்கிணைந்து பால்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இந்தத் தாக்குதலை அப்பொழுது கண்காணித்தனர். நம்முடைய பைலட்கள் பாதுகாப்புடன் திரும்பிவிட்டனர் என்ற தகவல் அதிகாலை 4 மணிக்கு எனக்கு வந்தது. அப்பொழுதுதான் நான் நிம்மதியானேன்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close