[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

காங்கிரஸ் கட்சி தொடர்பான 700 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கம்? 

facebook-removing-687-pages-linked-to-congress-ahead-of-polls

ஃபேஸ்புக் நிறுவனம் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவிற்கு தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரப்புவதை தடுக்க ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய தளங்கள் முயன்று வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு புதிய கட்டுபாடு விதித்திருந்தது. அத்துடன் ஃபேஸ்புக் தளத்தை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என எச்சரித்திருந்தது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவிற்கு தொடர்பான 687 பக்கங்களை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் பக்கங்களின் நம்பகத்தன்மையில்லாத செயல்பாட்டால் ஃபேஸ்புக் நிறுவனம் இவற்றை தளத்திலிருந்து நீக்கவுள்ளது. 

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கை அதிகாரி நாதனியல் கிளெய்சர், “இந்தப் பக்கங்களில் போலி கணக்குகள் பல இணைந்துள்ளன. அத்துடன் இப்பக்கங்கள் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை இல்லாததால் அவற்றை நீக்க முடிவு செய்துள்ளோம். இந்தப் பக்கங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு தொடர்புடையாது என்பது உறுதியாகியுள்ளது. 

எங்கள் தளத்தில் இயங்கி வரும் இது போன்ற போலி கணக்குகள் மற்றும் பக்கங்கள் மீது நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியாவிலிருந்து ஃபேஸ்புக் தளத்தில் செயல்பட்டு வந்த 227 பக்கங்கள் மற்றும் 94 கணக்குகள் அந்நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close