[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துகள்” - ‘பொடி வைத்து’ ராகுல் ட்வீட்

as-opposition-mocks-pm-modi-for-surprise-message-rahul-wishes-him-a-very-happy-world-theatre-day

விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அவருக்கு உலக நாடக தின வாழ்த்துகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்கள் மூலமாக இன்று உரையாற்றினார். அதில், “விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. விண்ணில் செயற்கைகோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனையில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. உலகில் மிக முக்கியமான மூன்று நாடுகள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

          

‘மிஷன் சக்தி’என்ற இந்தச் சோதனை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டது. 300 கி மீட்டர் தொலைவில் சென்று தாக்கக் கூடிய ஒரு சோதனையில் இந்தியா விண்வெளியில் சாதித்துள்ளது. இந்தச் சோதனைக்கு எல்.இ.ஓ. என்று பெயர். அதாவது ‘லோ எர்த் ஆர்பிட்’என்பது இதன் விரிவாக்கம். இது லைவ் சேட்டிலைட்டை அடித்து வீழ்த்துயுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர வேறு எந்த நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. ‘மிஷன் சக்தி’யை வெற்றி பெற செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். விண்வெளியில் இந்தியா பெரிய நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சோதனை நமது நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும்” எனப் பேசினார். 

விண்வெளித்துறையின் இந்தச் சாதனைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். அத்துடன், நாட்டின் இந்தச் சாதனையை பிரதமர் மோடி தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்று விமர்சனமும் செய்துள்ளனர். 

          

இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு). உங்களது பணியை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இத்துடன், பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இன்று உலகமே நாடக தினத்தை கொண்டாடி வருவதை முன்வைத்து ராகுல் இந்த அரசியல் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார் எனப் பலர் கூறியுள்ளனர்.

              

அதோபோல், அகிலேஷ் யாதவ் தன்னுடைய ட்விட்டரில், “ டிஆர்டிஓ மற்றும் இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். இந்தியாவை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவியதற்கு நன்றி. மேலும் வேலைவாய்ப்பின்மை, கிராமப்புற பிரச்னைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அடிமட்ட பிரச்னைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சிகள் மூலமாக இலவசமாக உரை நிகழ்த்தியுள்ளார்” என்று கூறியுள்ளார். 

               

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்தச் சாதனையை பிரதமர் மோடி தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாகவும், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close