[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்?

kamal-hassan-is-contesting-in-south-chennai

மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று தகவல் வெளியான
நிலையில், அவர் தென் சென்னையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக
மற்றும் திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை
சென்னை தி.நகரில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். 

அதன்படி, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இதில் வட சென்னையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மௌர்யா மத்திய சென்னையில் கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 24ம் தேதி வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் அறிவித்தார். மேலும், தான் போட்டியிடுவது குறித்தும் அப்போது தெரியவரும் என்றும் கூறினார்.

கட்சியின் தலைவரான கமல்ஹாசன், ராமநாதபுரம், தென்சென்னை, திருப்பூர் முதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பலரும் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். குறிப்பாக, கமல்ஹாசன், தன் சொந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் களம் காண்பார் என்ற பேச்சு அதிக அளவில் அடிபட்டது. தான் கட்சி ஆரம்பிக்கும்போதும் முதலில் அப்துல்கலாம் வீட்டிலிருந்தே தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் கமல்ஹாசன். 

ராமநாதபுரம் தொகுதியில் அமமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகன் வ.து.ந.ஆனந்தும், அதிமுக கூட்டணியின் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், திமுக சார்பில் கா.நவாஸ் கனியும் களம் காண்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேஷ்வரி வேட்பாளராக களம் இறங்குகிறார். அதோடு பல சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கமல்ஹாசன் தென்சென்னை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படித்தவர்கள் அதிகம்
இருக்கும் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவர் இந்த
முடிவினை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தென்சென்னை தொகுதியில் கடுமையான போட்டிகள் நிலவும் என்றே தெரிகிறது. திமுக சார்பில்
தமிழச்சி தங்கப்பாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தனும் போட்டியிடுகின்றனர். அதனால், கமல்ஹாசன் எந்த
தொகுதியில் போட்டியிடுவார் என்பது 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும்போதே தெரியும். 

கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்கள் அறிமுக விழாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close