[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

“கிரிமினல் வழக்குகளை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்” - தேர்தல் ஆணையர்

candidates-with-criminal-antecedents-will-have-to-announce-information-about-this-on-3-occasions-during-campaigns-cec-sunil-arora

பிரச்சாரத்தின் போது தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது:

பல்வேறு துறைகளோடும் பேசி தேர்தலை சூமுகமாக நடத்த ஏற்படுகாள் செய்துள்ளோம். அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்களோடு விரிவான ஆலோசனை நடத்தினோம். பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளோடும் ஆலோசனை நடத்தினோம். பள்ளித் தேர்வுகள், மத ரீதியான விழாக்கள் நடைபெறும் தேதிகளை கவனத்தில் கொண்டே தேர்தல் தேதிகளை முடிவு செய்துள்ளோம்.

இந்தியாவில் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 8.4 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள் வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும். வாக்களர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை காட்டும் புகைப்படமும் தேர்தல் இயந்திரத்தில் இடம் பெறும். 23 மாநிலங்களில் 100 சதவிகித வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 

    

வாக்கு சாவடிகளில் தண்ணீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மூத்த குடிமக்கள் வாக்களிக்க தனி நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். சிக்காலான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்யப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள். நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இன்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எந்தத் தொகுதியிலாவது பணப்பட்டுவாடா செய்ததாக ஊடங்களில் செய்தி வெளியானால் அங்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஆண்ட்ராய்டு ஆப் மூலம் மக்கள் புகார் தெரிவிக்கலாம். வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால், வேட்புமனு நிராகரிக்கப்படும். சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களும் தேர்தல் நடத்தை விதிமுறைக்களுக்கு கீழ் வரும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close