[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

திமுகவை ஒழிக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்: கருணாநிதி பேச்சு

dmk-chief-karunanidhi-speech-birthday-meeting

திமுகவை ஒழிக்க நினைக்கும் தேர்தல் ஆணையத்திற்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்,இவ்வாறு பேசினார். திமுக ஆட்சியில், குடிசைகளை கோபுரங்கள் ஆக்கி ஏழை எளியவர்கள் அற்ற சமத்துவம் கொண்டு வந்தோம் என பெருமிதம் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பிரதமர் மோடி முன்கூட்டியே ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து பாரதிய ஜனதா கட்சியினர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில், பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து பதிலளிக்கவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கருணாநிதி எச்சரித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close