[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - தோழமை கட்சிகளுக்கு திமுக அழைப்பு

dmk-to-begin-poll-talks-with-allies-include-vck-vaiko-tomorrow

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு, தோழமை கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவர்களிடம் தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு விசிகவுக்கு அதிகாரப் பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

           

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டில் மதிமுகவுக்கு மூன்று இடங்களும், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் வழங்க உள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போதே தோழமைக் கட்சிகள் தங்களுடைய விருப்பத் தொகுதிகளை அளித்ததாக தெரிகிறது. ‌ 

          

டெல்லியில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியினர் பங்கேற்றுள்ளதால் வரும் திங்கட்கிழமை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டால் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி அறிவிக்கப்படும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close