[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

aap-announces-six-delhi-candidates-for-lok-sabha-elections-2019

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவல் வெளியான நிலையில், 6 தொகுதிக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தலையொட்டி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகள் பல்வேறு தருணங்களில் ஒன்றுகூடி வருகிறார்கள். மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகள் தரப்பில் நடக்கும் கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்கள். 

      

இந்த எதிர்க்கட்சிகள் முகாமில் தொடக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை. சமீப காலமாகதான் அவரும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஆத் ஆத்மி கட்சியும் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. 

ஆனால், சமீபகாலமாக காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறி வந்தார். அதனால், இருதரப்புக்கும் இடையே லேசான கருத்து முரண்பாடு இருப்பதாக பேசப்பட்டது. இருப்பினும்,  டெல்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தலை‌வர் ராகுல் காந்தி ஒ‌ப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

        

இந்நிலையில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லி ஆம் ஆத்மி அமைப்பாளர் கோபால் ராய் அறிவித்துள்ளார். வேட்பாளர் அறிவிக்கப்படாத மேற்கு டெல்லி தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் கோபால் ராய் தெரிவித்தார். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து பேசிய கோபால் ராய், “காங்கிரஸ் தரப்பில் இருந்து இரண்டு முறை ஆம் ஆத்மியிடம் பேசப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்ஷித் மறுத்துவிட்டார்” என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close