[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்

இரட்டை இலக்கமா..? இரட்டை இலையா..? குழப்பத்தில் தேமுதிக...!

admk-dmdk-alliance-will-come-to-end

தொகுதிப் பங்கீடு பிரச்னையால் தான் அதிமுக - தேமுதிக இடையிலான கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் 2 கட்சிகளும் அதற்குப் பின் நடைபெற இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பார்கள் என கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக- பாமக- பாஜக கூட்டணியில் தேமுதிகவை இணைக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், நேற்று முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விஜயகாந்துடன் தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல்,  “சிகிச்சைப்பிறகு விஜயகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். நீண்ட உடல் நலம், ஆயுளோடு அவர் இருக்க பிரார்த்திக்கின்றோம். விஜயகாந்த் எனது பழைய நண்பர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா சார்பில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவருக்கு வாழ்த்துகளை கூறுமாறு மோடியும், அமித் ஷாவும் கூறினர். கூட்டணி அரசியல் மட்டுமே முக்கியமல்ல. தனிப்பட்ட நட்பும் முக்கியம்” என்றார். இதனிடையே அதிமுக-தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட காரணத்தினால் தான் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது.

இருந்தாலும் தேதிமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக பலகட்ட முயற்சி எடுப்பதாக கூறப்பட்டது. இதனிடையே, அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் தொகுதி பங்கீடு குறித்து தேமுதிகவின் சுதீஷ் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. 10 தொகுதிகளை ஒதுக்க தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்படும் நிலையில், அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் 10 தொகுதிகளை ஒதுக்குகிறோம். ஆனால் தேமுதிக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கண்டிஷன் போடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் நடைபெறவிருக்கும் 21 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தேமுதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கோரிக்கை வைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் தேமுதிக ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் தான் தற்போது வரை இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.

இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரது இல்லத்தில் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தேமுதிகவுடன் கூட்டணி குறித்த எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close