[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் தலைமையில் தேர்தல் குழுக்கள் - காங். அறிவிப்பு

appointment-of-office-bearers-for-various-committees-for-tamil-nadu-pradesh-congress-committee

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கானக் குழுக்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்களுக்கு குழுக்களை அறிவித்துள்ளன. அந்த வரிசையில் காங்கிரஸ் தமிழகத்திற்கான தேர்தல் குழுக்களை அமைத்துள்ளது.

          

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் அமைத்ததுள்ளது. தேர்தல் குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். திருநாவுக்கரசர் தலைமையில் 35பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவை காங்கிரஸ் அமைத்தது. தேர்தல் பரப்புரை குழுவில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் உள்ளனர். 

           

அதேபோல், ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 14பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஊடக ஒருங்கிணைப்புக் குழுவில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.  

       

இதனிடையே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு பேட்டியில், “திமுகவுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். கடலூரில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close