[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

''என் பரப்புரையை தடுக்க சில கட்சி தலைவர்கள் முயற்சி'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

prakashraj-complained-against-karnataka-politicians

மக்களை நோக்கிய தமது பயணத்தை தடுக்க, கர்நாடகாவின் சில அரசியல் கட்சித் தலைவர்கள் முயற்சிப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பெங்களூரு மத்திய நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், அத்தொகுதி மக்களை நேரில் சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சாந்த்னிநகரில் பரப்புரை தொடங்கிய தங்களை சில அரசியல் கட்சி தலைவர்கள் தடுத்ததாகவும், தமது பயணத்தால், எந்தளவுக்கு அவர்கள் ஆடிப்போய் உள்ளனர் என்பதை இது காட்டுவதாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக காவல் ஆணையரிடம் பேசி தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ், நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில், தங்களின் பயணம், நாளைமுதல் மேலும் தீவிரமாகும் என கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close