[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

“நாடாளுமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்கத் தயாரா?” - நிர்மலா சீதாராமன் கேள்வி

after-rahul-gandhis-resign-demand-nirmala-sitharaman-s-comeback

ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் இருந்தால் நிரூபியுங்கள், இல்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கெடு வித்தித்துள்ளார். 

ரஃபேல் விமான ஊழல் விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது. காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பாஜக அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தது. 

            

இதனிடையே, மக்களவையில் ரஃபேல் விவகாரத்தை எழுப்பி ராகுல் காந்தி அனல் பறக்க உரையாற்றி வருகிறார். ஐந்து முக்கியமான கேள்விகளை மத்திய அரசுக்கு அவர் முன் வைத்தார். ராகுலுக்கு பதில் அளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதிரடியாக பேசி விளக்கம் அளித்தார். இதனால், நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகின்றது.  

இந்நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை சுட்டிக்காட்டினார். 

 

ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “நீங்கள் ஒரு பொய் சொன்னால், அதனை மறைக்க தொடர்ச்சியாக பொய் சொல்ல வேண்டியுள்ளது. பிரதமரை காப்பாற்ற, பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய் சொல்லியுள்ளார். நாளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஒருலட்சம் கோடி ஒப்பந்தங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு 26 ஆயிரத்து 571 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதற்கான ஆவணங்களையும் ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். ஹெச்.ஏ.எல். நிறுவன ஒப்பந்தங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தவறான கருத்துகள் வெட்கப்படத்தக்கவை என அவர் சாடியுள்ளார்.

       

2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை ஹெச்.ஏ.எல்.லுக்கு 26 ஆயிரத்து 570 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை மத்திய அரசு வழங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ள அவர், நாட்டுக்கு தவறான தகவல்களை அளித்துள்ள ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close