[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி 

former-congress-president-sonia-gandhi-to-participate-in-unveiling-of-former-dmk-chief-m-karunanidhi-s-statue-at-anna-arivalayam-on-december-16

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்கிறார். 

கடந்த 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு அறிஞர் அண்ணா சிலையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். 

இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. அண்ணா சிலையை புணரமைக்கப்பட்ட வெண்கல சிலையாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

            

அண்ணா அறிவாலயத்தில் புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில், டிசம்பர் 16 ஆம் தேதி அமைக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்தது. 

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். சோனியா காந்தி ஒப்புதல் அளித்த கடிதத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

                

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close