[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்

no-alliance-with-bjp-even-after-election-says-stalin

பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கும் வாய்ப்பில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாட்டின் பன்முகத் தன்மை மற்றும் மாநிலங்களின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயகச் சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றும், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கும் வாய்ப்பில்லை என்ற அவர் பாஜகவின் மதவாத மற்றும் பாசிச கொள்கையை திமுக என்றும் எதிர்க்கும் எனவும் தெரிவித்தார். திமுகவின் அரசியல் கொள்கைகளை புரிந்து கொள்ளாதவர்கள்தான், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் சமயத்தில் கருணாநிதி கையாண்ட வெற்றிகரமான சூத்திரங்களை தான் தானும் பயன்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ஓட்டுகள் சிதறாமல் இருக்க ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close