[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்

terrorist-in-tamilnadu-pon-radhakrishnan

தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் பெரும் அழிவைச் சந்திப்பார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், தமிழ்ப் பெயரை சொல்லி பிரிவினைவாதத்தை பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் தமிழகத்தின் பல அமைப்புகளுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு விரைந்து செயல்படவில்லையென்றால் தமிழக மக்கள் மிகப் பெரிய அழிவை சந்திக்க கூடிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது சமூக விரோதிகள் புகுந்ததுதான் வன்முறை ஏற்படக் காரணம் என ரஜினிகாந்த் குற்றஞ்சாட்டியிருந்தார். அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள் உட்புகுந்ததாக ரஜினி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் பல அமைப்புகளுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close