[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மோடியின் பிட்னஸ் சவாலுக்கு ஏற்றவர் தேவ கௌடா - களத்தில் குதித்த தொண்டர்கள்

at-86-deve-gowda-could-be-the-right-man-to-take-up-pm-modis-fitness-challenge

குமாரசாமிக்கு பதிலாக தேவ கௌடாவுக்கு மோடி பிட்னஸ் சவால் விடுத்திருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

விராட் கோலியின் பிட்னஸ் சவாலை ஏற்ற பிரதமர் மோடி சமீபத்தில் தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். மோடியின் உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது. உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மோடி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு சவால் விடுத்து டேக் செய்தார். 

           

ஆனால், மாநிலத்தின் பிட்னஸ் தான் முக்கியம் கூறி பிரதமரின் சவாலை குமாரசாமி நிராகரித்துவிட்டார். இருப்பினும், குமாரசாமி சமீபத்தில் தான் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதனால் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது என்றும் கூறப்படுகிறது. 

ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை விடவில்லை. பிரதமர் மோடி குமாரசாமியை விட அவரது தந்தை தேவ கௌடாவுக்கு சவால் விட்டிருக்க வேண்டும் கூறி ட்விட்டரில் களத்தில் குதித்துள்ளனர். தேவ கௌடா உடற்பயிற்சி செய்யும் பல்வேறு புகைப்படங்களை அவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். தேவ கௌடாவின் உடற்பயிற்சி புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

86 வயதான தேவ கௌடா தினசரி தவறான தனது உடற்பயிற்சியை செய்வார். பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் ஜிம் ஒன்று உள்ளது. உடற்பயிற்சிக்காக பயிற்சியாளர் ஒருவரையும் நியமித்துள்ளார். அவரின் ஆலோசனைப்படி கடினமான உடற்பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்சிக்காக தினசரி ஒரு மணி நேரத்திற்கு மேலாக செலவு செய்கிறார். வெயிட் லிப்ட், டம்பிள்ஸ் உள்ள பயிற்சிகளை இந்த வயதிலும் அவர் செய்கிறார். 

               

தன்னுடைய உடல் ஆரோக்கியம் குறித்து தேவ கௌடா கூறுகையில், “நான் குறைவாக சாப்பிடுவேன். குடிப்பழக்கம் இல்லை. புகைப்பழக்கமும் இல்லை. சாதாரணமான காய்கறி உணவுகளையே சாப்பிடுவேன். குறைவாகவே உறங்குகிறேன். காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவேன். எனக்கு எவ்வித பேராசையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

        

தேவ கௌடாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறது என்றும் 86 வயதிலும் அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சி செய்கிறார் என்றும் அவரது பயிற்சியாளர் கார்த்திக் கூறுகின்றார்.

                

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னுடைய கட்சிக்காக 6000 கிலோமீட்டர் தூரம் பிரச்சாரம் செய்தார். முன்னாள் பிரதமரான தேவ கௌடா தலா 7 முறை எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியுள்ளார். 

 

போட்டோ கேலரி

1 of 7

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close