[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

பாஜகவுக்கு ஆதரவு கேட்டு வந்த நிர்மலாவுக்கு தமிழகத்தில் கிடைத்த ஷாக் !

nirmala-visits-city-for-sampark-for-samarthan

வருகின்ற 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு புதிய யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ (சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்) என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. அதன்படி, பாஜக தலைவர்கள் முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரபலங்களை சந்தித்து மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம். ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ திட்டத்தின்படி பாஜக தலைவர் அமித்ஷா பல்வேறு பிரபலங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட நிர்மலா சீதாராமன், சம்பார்க் ஃபார் சமர்தன் திட்டப்படி சினிமா உலக பிரபலங்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் சிலரை சந்தித்தார். இரண்டு நாள் பயணத்தின் போது, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, டிவிஎஸ் அண்டு சன்ஸ் இணை மேலாண்மை இயக்குநர் தினேஷ், இசையமைப்பாளர் இளையராஜா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை மேலாண்மை இயக்குநர் மனோஜ் சோந்தலியா, தந்திக் குழும தலைவர் பாலசுப்ரமணியம் ஆதித்யன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரை சந்தித்து ஆதரவு கோரினார் நிர்மலா சீதாராமன். மேலும், மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கையேடு ஒன்றினையும் அனைவரிடமும் அவர் வழங்கினார். 

இந்தச் சந்திப்பின் போது மோடி அரசாங்கத்திற்கான வரவேற்பு கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறப்படுகிறது. மேலும், நிர்மலா சீதாராமன் சந்தித்தவர்களிடம் இருந்து எதிர் கருத்துகள் அதிக அளவில் வந்ததாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் நிலவி வரும் இடதுசாரி தீவிரவாதம் குறித்து பாஜக தலைமையிடம் தெரிவிக்குமாறு சிலர் கூறியுள்ளனர். சந்திப்பின் போது சில பிரபரலங்கள், தமிழகம் யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது? தூத்துக்குடியில் என்ன நடந்தது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமனால் பதில் அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழக விவகாரம் குறித்து, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் நிலவரம் குறித்து விளக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

காவிரி பிரச்னை, மீத்தேன் எரிவாயு, நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதன் விளைவாக தான் பரமக்குடி அருகே, மத்திய அரசுத் திட்டங்கள்குறித்து ஆய்வு நடத்த வந்த நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அமைச்சரின் காரை நோக்கி செருப்பு மற்றும் கல் வீசப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான், பாஜகவுக்கு ஆதரவு கேட்கும் நிர்மலா சீதாரமனின் முயற்சிக்கும் பலன் கிட்டவில்லை என்றே தெரிகிறது. 
 

போட்டோ கேலரி

1 of 6

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close