[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

கருணாநிதி நூறாண்டு வாழ ஜெயக்குமார் வாழ்த்து

minister-jayakumar-wishesed-karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி நூறாண்டு வாழ வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இன்று 95ஆவது பிறந்த நாள். நாட்டின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், உட்பட தேசிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிறந்தநாள் காணும் திமுக தலைவர் கருணாநிதி நூறாண்டு வாழ வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்தியுள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் குறித்து கட்சி ரீதியாக கருத்து கூற முடியாது என்றும் கருணாநிதி நூறாண்டு வாழ வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். நாளை முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக திமுக அறிவித்துள்ளதையும் வரவேற்றார். சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்கவில்லை என்று மக்கள் மத்தியில் தவறான கருத்தை திமுகவினர் பரப்புவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close