[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஓசூர், சென்னையில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பரப்புரை

pm-modi-election-campaign-in-chennai-hosur-today

சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.

ஓசூர் - தளி சாலையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையம் வரும் பி‌ரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை செய்கிறார். இதையொட்டி, 8 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் காவல்துறையினர் நான்கடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, விமானம் மூலம் சென்னை வரும் மோடி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமரின் வருகையொட்டி, சென்னையில் 5,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close