[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

நொடிக்கு நொடி பரபரப்பு: கர்நாடகா நிலவரம் இதுவரை

karnataka-drama-supreme-court-arguments

கர்நாடகாவில் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க உள்ள நிலையில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து நடந்த பரப்பான நிகழ்வுகளை தெரிந்து கொள்வோம்.

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, நொடிக்கு நொடிக்கு அம்மாநிலத்தில் பரபரப்பு மற்றும் திருப்பங்கள் நிறைந்த காட்சிக்கு பஞ்சமில்லை. 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும்‌ ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியிருந்தனர். 

இதனையடுத்து நேற்று பிற்பகல் 2.57 மணி அளவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனது எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து வாங்கியது. மாலை 04.28 எம்.எல்.ஏக்கள் பிடதியிலுள்ள ஈகல்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 04.50 மணி அளவில் ஆளுநரை சந்திக்க தனது ஆதரவாளர்களுடன் ஆளுநர் மாளிகை வந்தார் குமாரசாமி. மாலை 5 மணி அளவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களை சந்திக்க ஆளுநர் மறுத்தார். மாலை 5.30 மணி அளவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் மட்டும் ஆளுரை சந்தித்து பேசினர்.

 

இந்த சூழலில்  இரவு 9.30 மணி அளவில்  பாஜகவைச் சேர்ந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்கக் கோரி இரவு 10.30 மணிக்கு காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தொடுத்தது. காங்கிரஸின் மனுவை நள்ளிரவு 1.45 விசாரிப்பதாக நள்ளிரவு 1.13 மணி அளவில் உச்சநீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன், எஸ்.ஏ. பாப்டே ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு நள்ளிரவு 2.11 மணியளவில் விசாரணையை தொடங்கியது. எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுத்ததோடு, வழக்கை நாளை ‌காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்து, அதிகாலை 5.30 மணி அளவில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close