[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

கருணாநிதியை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் - மூன்றாவது அணிக்கு வியூகமா?

telungana-chief-minister-kc-rao-going-to-meet-dmk-president-karunanidhi-and-stalin

திமுக தலைவர் கருணாநிதியை தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளார். கருணாநிதியிடம் நலம் விசாரித்த பின்னர் ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை செய்கிறார். 

கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வபோது மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலான தலைவர்களும் கருணாநிதியை சந்தித்த வண்ணம் உள்ளனர். சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். 

இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் கருணாநிதியை சந்திக்க உள்ளார். காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் சந்திர சேகர் ராவ். இவரது இந்தக் கருத்துக்கு முதலில் ஆதரவு குரல் கொடுத்தவர் மம்தா பானர்ஜி. ஆதரவு கொடுத்த கையோடு ஸ்டாலினுக்கு போனில் பேசிய அவர் ஆதரவு கோரினார். இதனால், மூன்றாவது அணி குறித்த வளைத்திற்குள்  ஸ்டாலினும் நுழைந்துவிட்டார். மம்தாவும் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

இதனையடுத்து மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு, தான் ஆதரவளிப்பதாகத் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க எப்போதும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் வலிமையான கூட்டாட்சிக்காகவும் துணை நிற்கும். பா.ஜ.க-வின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன்” எனப் பதிவிட்டு இருந்தார். 

மூன்றாவது அணி குறித்த பேச்சு அடிபட்டு வரும் வேளையில், கருணாநிதி, ஸ்டாலின் உடனான சந்திர சேகர் ராவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close