[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தேர்தல் களத்தில் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் போட்டி: ஆர்.கே.நகரில் 45 பேர் போட்டி

assembly-election-final-candidates-list

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இதில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3,472 பேரும், பெண் வேட்பாளர்கள் 320 பேரும், திருநங்கை வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியிடுகின்றனர். கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 2,748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதிகபட்சமாக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக கூடலூரில் 8 பேர் களம் காண்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15 வேட்பாளர்களும், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் போட்டியிடும்  உளுந்தூர்பேட்டையில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் 24 பேர் களத்தில் உள்ளனர். 

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 378 பேரும், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 182 வேட்பாளர்களும், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சியில் 9 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close