[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

ஹெச்.ராஜாவுக்கு ஒரு டவுட்

one-doubt-for-h-raja

உதயநிதி என்பது தமிழ்ப் பெயரா என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில்  “ஆமாம் உதயநிதி என்பது தமிழ் பெயரா? சும்மா ஒரு டவுட்” என பதிவிட்டுள்ளார். சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலின் நினைவாகவே தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் வைக்கப்பட்டதாகவும் தனக்கு அய்யாதுரை என்றே பெயர் வைக்க கருணாநிதி முடிவெடுத்திருந்தாகவும் கூறினார்.‌ மேலும் தனது சகோதர சகோதரிகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் ஸ்டாலின் விவரித்தார்‌. இந்நிலையில் ராஜா தனது சந்தேகத்தை ட்விட்டரில் எழுப்பியுள்ளார்.


கடந்த வருடம் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்கு விளம்பரம் செய்தது போன்று என்னுடைய ‘இப்படை வெல்லும்’ படத்திற்கும் ஹெச்.ராஜாவை பேச வைக்கலாம் என நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.அதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்த ராஜா “ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்” என தெரிவித்தார். தற்போது ராஜா, உதயநிதி குறித்து மீண்டும் விமர்சித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close