[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சவாலான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து - சோனியா காந்தி
  • BREAKING-NEWS மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை - வைகோ
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS காவலர்கள் ஒழுக்கத்துடன் எப்போதும் பணியாற்ற வேண்டும்- காவல் ஆணையர் விஸ்வநாதன்
  • BREAKING-NEWS இயற்கை சீற்றங்களின்போது மீனவர்கள் கரை திரும்ப இஸ்ரோ நேவிகேஷன் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது- இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டேன்- நாஞ்சில் சம்பத்

அரசியலிலும் இணைகிறார்களா ரஜினி-கமல்?

rajini-kamal-to-join-politics

அரசியல் பயணத்தில் நண்பர்களைப் பகைவர்களாக்கி வழக்கமான அரசியலை செய்ய எனக்கு விருப்பமில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் சினிமா துறையில் இவர்கள் இருவேறு துருவங்கள். கமல் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ரஜினி தனது ஸ்டைல் மூலம்ஈர்த்தவர். ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்தே படங்களில் நடித்து வந்தனர். 
பின்னர் கமலின் அறிவுரைப்படி இவர்கள் தனித்தனியே படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். ரஜினியின் படங்களில் அரசியல் குறித்த பேச்சுகளும் இருந்தது. இதனால் அவர் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு இருந்தது. 

1996ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கூறிய கருத்து அப்போது திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்திற்கு உதவியது என்று சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இதனை நினைவுபடுத்தினார்.அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. அந்த வேளையில் “இப்போதைய ஆட்சி தொடர்ந்தால், ஆண்டவனே காப்பாற்ற முடியாது” என கருத்து தெரிவித்தார். 

இதனையடுத்து ரஜினி மீதான அரசியல் பார்வை அதிகரித்தது.அதற்கேற்றவாறு ரஜினி ரசிகர்களை சந்தித்து தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்தாண்டு ரஜினி, கமல் இவர்களின் அரசியல் குறித்த பேச்சுக்கள் அதிகமானது. ரஜினி தனது ரசிகர்களின் சந்திப்பில் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார். இதனிடையில் கமல்ஹாசன் ட்விட்டரில் அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து இவர்களின் அரசியல் வருகை உறுதியானது. கமல்ஹாசன் சமூக ஆர்வலர்களை அழைத்துக்கொண்டு எண்ணூர் துறைமுக கழிமுகப்பகுதியை பார்வையிட்டார். கமல் இப்படி சென்றுக்கொண்டிருக்க ரஜினி தனது ரசிகர்களிடம் போருக்கு தயாராகுங்கள் என்றார். தனது ரசிகர்களுடனான சந்திப்பில் அரசியலுக்கு வருவது உறுதி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என தெரிவித்தார். உங்கள் கொள்கை என்ன என்பது குறித்த கேள்விக்கு, தனக்கு ஒரு நிமிஷம் தலை சுற்றிவிட்டது என்றார்.

இந்நிலையில் வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதியுள்ள கட்டுரையில் அரசியல் கட்சியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பயம் காரணமல்ல என தெரிவித்துள்ளார். என் அரசியல் பயணத்தில் நண்பர்களைப் பகைவர்களாக்கி, அந்தப்பகையை பெரிதாக்கி,அதை வியாபாரமாக்கி, அதன்மூலம் என் இருப்பை நிலைநிறுத்தி..இப்படி வழக்கமான பாரம்பரியத்தில் வரும் அரசியல்வாதியாகத் தொடர் எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒரு தலைமையின் கீழ்தொடரவும் இன்றைய இளைஞர்களும் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார். இந்தப்பதிவின் மூலம் கமலின் அரசியல் பயணம் தனிக் கட்சி அளவுக்குப் போகப் போவதில்லை என தெரிகிறது. அதேவேளையில் ரஜினி அரசியல் பிரவேசத்திற்கு கமல் வெள்ளைக்கொடி காட்டுவதாக தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close